நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமித்து வைக்க

மாணவர்கள் முதல் உலக அளவில் பெயர் பெற்ற பிரபலங்கள் வரை அனைவருமே டிவிட்டர் கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நம் டிவிட்டர் செய்திகளை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.
டிவிட்டர் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு அழகான சமூக இணையத்தளமாகும். இந்த டிவிட்டரில் நாம் பகிர்ந்து கொண்ட செய்திகளை மொத்தமாக சேமித்துக் கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் நம் டிவிட்டர் பயனாளர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் இருக்கும் Export என்ற மெனுவை சொடுக்கி நம் பதிவுகளை மொத்தமாக ஒரே கோப்பாக மாற்றி கணணியில் சேமித்து வைக்கலாம்.
நான்கு விதமான(CSV | RSS | Text | HTML) போர்மட்களில் நம் மறக்க முடியாத டிவிட்டர் நினைவுகளை சேமித்து வைக்கலாம்.

No comments:

Post a Comment