உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் போதும் ஞாபகார்த்தமாக பிடிக்கப்படும் புகைப்படங்களை எல்லோரும் தமக்கு பிடித்த வண்ணங்களில் மாற்றி வடிவமைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
இதற்காக அதிகளவில் கணணி மென்பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு புகைப்படங்களை வடிவமைக்க பிரபல்யமான எத்தனை மென்பொருட்கள் காணப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய பல வசதிகளுடன் வெவ்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
                                                                  அந்தவகையில் தற்போது பல்வேறு வசதிகளுடன் piZap எனும் புதிய புகைப்பட வடிவமைப்பு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஓன்லைனில் வைத்தும் நாம் புகைப்படங்களை வடிவமைக்க முடிவதுடன், மென்பொருளாக தரவிறக்கம் செய்து கணணில் நிறுவியும் கொள்ளலாம்.
இதன் மூலம் வண்ணமயமான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் படங்களை ஒன்றிணைத்தல், பின்னணிகளை மாற்றியமைத்தல், மேலதிக ஒப்பனை செய்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment