ரகசியமாக தகவல்களை பகிர உதவும் இணையம்
நீங்கள் யாருக்கு தகவல் அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த தகவலை படிக்க
கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புகிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் தகவலை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு
முகவரி ஒன்றை தருகிறது. இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும்
தான் அதனை படிக்க முடியும். அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க
முடியும். அதன் பிறகு அந்த தகவல் இணைய வெளியில் மறைந்து விடும்.
தகவலை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்பதையும் அதற்கு கடவுச்சொல் தேவையா என்பதை
கூட அனுப்புகின்றவரோ தெரிவு செய்து கொள்ளலாம். கடவுச்சொல் பாதுகாப்பு
உறுப்பினர்களுக்கு மட்டும் தான். ஆனால் தகவல் அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற
நிபந்தனையில்லை.
எந்த தகவலையும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும். உறுப்பினராக இருந்தால்
தகவல் படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.
ரகசிய தகவலை யாரும் நகலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக
ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.
இந்த தகவலுக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு
சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்கும். யாருக்கு
அனுப்பபட்டதோ அவரால் தகவல் பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் தகவல் தானாக
மறைந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment